சிந்துபாத்


சிந்துபாத்
x
தினத்தந்தி 6 July 2019 1:42 PM GMT (Updated: 6 July 2019 1:42 PM GMT)

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.

கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘சிந்துபாத்’.

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’.

முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

எடிட்டிர் - ரூபன், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் - விஜய் கார்த்திக் கண்ணன் 

Next Story