வசூலில் முதல் இடம் பிடித்தது ‘அவதார்’ சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ்’


வசூலில் முதல் இடம் பிடித்தது ‘அவதார்’ சாதனையை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ்’
x
தினத்தந்தி 22 July 2019 4:25 AM IST (Updated: 22 July 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் படங்கள் வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இந்த வருடத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இது இருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே வசூலை அள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 11 நாட்களில் 21 ஆண்டுகளுக்கு மேலாக வசூலில் இரண்டாவது இடத்தில் இருந்த டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது. இதற்காக டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்து வசூலில் முதல் இடத்தில் இருக்கும் அவதார் சாதனையையும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறியடிக்குமா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது. அவதார் படம் உலகம் முழுவதும் ரூ.19 ஆயிரத்து 210 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் குறைந்ததால் அவதாரை முந்த முடியாமல் பின் தங்கியது.

இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை சமீபத்தில் மீண்டும் மறு ரிலீஸ் செய்தனர். இதில் புதிதாக சில காட்சிகளை இணைத்து இருந்தார்கள். 2-வது தடவை வெளியாகி உள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் அவதார் பட வசூலை முறியடித்து முதல் இடத்தை பிடித்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் கெவின் பீஜ் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
1 More update

Next Story