ஜாக்பாட்


ஜாக்பாட்
x
தினத்தந்தி 2 Aug 2019 7:02 AM IST (Updated: 2 Aug 2019 7:02 AM IST)
t-max-icont-min-icon

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜாக்பாட்’ படத்தின் முன்னோட்டம்.

சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது மூன்றாவது முறையாக சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் தான் “ஜாக்பாட்”. இப்படத்தை இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே 'குலேபகாவலி' படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர்.

படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த ' ஜாக்பாட் ' டிற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். 
1 More update

Next Story