ஜீவா-அருள்நிதி இணைந்து நடிக்க சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம்


ஜீவா-அருள்நிதி இணைந்து நடிக்க சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம்
x
தினத்தந்தி 10 Aug 2019 9:40 PM IST (Updated: 10 Aug 2019 9:40 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த பட நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது.

1990-ம் ஆண்டில், ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால்பதித்தது, ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த பட நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. பல நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை, சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த நிறுவனம் இதுவரை 89 படங்களை தயாரித்துள்ளது. 90-வது தயாரிப்பாக, ‘களத்தில் சந்திப்போம்’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் ஜீவா, அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

காரைக்குடி செட்டியாராக ‘அப்பச்சி’ என்ற வித்தியாசமான வேடத்தில், ராதாரவி நடிக்கிறார். பால சரவணன், இளவரசு, ரோபோ சங்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘பிசாசு’ பட புகழ் பிரக்யா மார்ட்டின் கவுரவ வேடத்தில் வருகிறார்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்பவர், என்.ராஜசேகர். ஆர்.அசோக் வசனம் எழுதுகிறார். பா.விஜய், விவேகா ஆகிய இருவரும் பாடல்களை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘‘இரண்டு நண்பர்களுக்கு இடையேயான நட்பை அடிப்படையாக கொண்ட படம், இது. அதிரடி சண்டை காட்சிகள், படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும். படம், சென்னை, தென்காசி, காரைக்குடி ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது’’ என்கிறார் படத்தின் டைரக்டர் ராஜசேகர்.
1 More update

Next Story