கோமாளி


கோமாளி
x
தினத்தந்தி 17 Aug 2019 7:28 AM IST (Updated: 17 Aug 2019 7:28 AM IST)
t-max-icont-min-icon

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டம்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடியாக, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ஜெயம்ரவி இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
1 More update

Next Story