பொன்மகள் வந்தாள்


பொன்மகள் வந்தாள்
x
தினத்தந்தி 29 May 2020 11:09 PM IST (Updated: 29 May 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.

“இது, உணர்ச்சிகரமான கதை. மர்மம், திகில், சமூக பிரச்சினைகள் ஆகிய எல்லா அம்சங்களும் நிறைந்த படம். தினம் நாம் பார்க்கிற சமூக பிரச்சினைகள் படத்தில் இருக்கும். இது, ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் படமாகவும், பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களின் படமாகவும் இருக்கும். ஜோதிகா வழக்கறிஞராக நடித்து இருக்கிறார்.”

‘பொன்மகள் வந்தாள்’ படத்தை பற்றி இப்படி பேச ஆரம்பித்தார், அதன் டைரக்டர் ஜே.ஜே.பிரடரிக். தொடர்ந்து அவர் கூறுகையில்..

“இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகிய 5 டைரக்டர்கள் நடித்துள்ளனர். கதை எழுதும்போதே இவர்களை நடிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டேன். ஐந்து பேரும் எனக்கு டைரக்டர்களாக தெரியவில்லை. நடிகர்களாகவே பார்த்தேன். ஐந்து பேரில் ஒருவர், வில்லன். அது யார்? என்பது ‘சஸ்பென்ஸ்.’ அந்த ஐந்து பேரும் யூகிக்க முடியாத கதாபாத்திரங்களாக இருப்பார்கள்.

நான் லயோலா கல்லூரியில், ‘விஸ்காம்’ படித்தேன். டைரக்டர் அகமதுவிடம் உதவியாளராக வேலை செய்து இருக்கிறேன். என்னை நம்பி, சூர்யா சார் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். கடந்த 27-ந் தேதியே, இந்தப் படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். கொரோனாவால் தள்ளிப்போய் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டபின், படம் திரைக்கு வரும்.”
1 More update

Next Story