‘உறியடி’ விஜய்குமாரின் புதிய படம்


‘உறியடி’ விஜய்குமாரின் புதிய படம்
x
தினத்தந்தி 11 Dec 2020 4:40 PM IST (Updated: 11 Dec 2020 4:40 PM IST)
t-max-icont-min-icon

டைரக்டர்-நடிகர், ‘உறியடி’ விஜய்குமார் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி நடித்தார்.

 2 படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அமோகமாக இருந்தது. துணிச்சலான அழுத்தமான கருத்துகளை சொல்லியிருந்தார். இதைத்தொடர்ந்து, ‘சூரரைப்போற்று’ படத்துக்கு வசனம் எழுதினார். இப்போது, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

உறியடி, உறியடி-2 ஆகிய இரண்டு படங்களிலும் விஜய்குமாரிடம் உதவி டைரக்டராக இருந்த அப்பாஸ் இயக்குகிறார். ஆதித்யா நாராயணன் தயாரிக்கிறார். விருதுகளை வென்ற பல குறும் படங்களை தயாரித்த பட நிறுவனம், இந்த முழு நீள படத்தை தயாரிக்கிறது.

தயாரிப்பு வேலைகள் தொடங்கின. விரைவில் படப்பிடிப்புக்கு செல்வதற்கு படக் குழுவினர் தயாராகி வருகிறார்கள்.
1 More update

Next Story