‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி மீண்டும் இணைகிறது

இளன் இயக்கி ஹரீஸ் கல்யாண் நடித்து, யுவன்சங்கர்ராஜா இசையில் 12 பாடல்களுடன் வெளிவந்த படம், ‘பியார் பிரேமா காதல்.’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது.
இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகனாக ஹரீஸ் கல்யாண் நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகத்தை நடிக்க வைக்க இருக்கிறார்கள். இதற்காக இதுவரை 100-க்கும் மேற்பட்ட புதுமுகங் களை பார்த்து விட்டதாகவும், பொருத்தமான நாயகி இதுவரை சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இளன் டைரக்டு செய்ய, ஸ்கிரீன் சீன் மீடியா என்ற படநிறுவனம் தயாரிக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் இளன் சொல்கிறார்:
“பியார் பிரேமா காதல்’ போல் இதுவும் ஒரு காதல் கதைதான். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூடிய அழகான காதல் படம். போன படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றன. புதிய படத்திலும் அதிக பாடல்கள் இடம் பெறும்.
படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்கி, சென்னை, ஊட்டி, மும்பை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.”
Related Tags :
Next Story






