எண்ணி துணிக


எண்ணி துணிக
x
தினத்தந்தி 27 Jan 2021 7:31 PM IST (Updated: 27 Jan 2021 7:31 PM IST)
t-max-icont-min-icon

வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க ஜெய் படத்தின் பெயர், ‘எண்ணி துணிக’

ஜெய் நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரயிருக்கும் படத்துக்கு ‘எண்ணி துணிக’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது ஒரு திகில் படம். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார்.

வில்லன் வேடத்துக்கு வம்சி கிருஷ்ணா தேர்வானது பற்றி டைரக்டர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் சொல்கிறார்:-

“எண்ணி துணிக படத்தின் வில்லன் கதாபாத்திரம், சர்வதேச கடத்தல்காரன். இந்த வில்லன் வேடத்துக்காக பல நடிகர்களை தேர்வு செய்து பார்த்தோம். மிக ஸ்டைலாகவும், கலக்கலானதாகவும் அந்த கதாபாத்திரம் இருப்பதால் யாரும் பொருந்தவில்லை. வம்சி கிருஷ்ணா கச்சிதமாக பொருந் தினார்.

படத்தின் தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருப்பதால், வில்லன் கதாபாத்திரத்துக்கான உடைகளை அங்கேயே வாங்கி அனுப்பி வைத்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் நடிக்கிறார். ‘சீதக்காதி’ பட புகழ் சுனில்ரெட்டி அரசியல்வாதியாக வருகிறார்.

வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. சண்டை காட்சிகள், சென்னை சுற்றுப்புறங்களில் படமாகி வருகின்றன. பாடல் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்”.
1 More update

Next Story