கொற்றவை

புதிய தொழில்நுட்பத்துடன் ‘கொற்றவை’ சி.வி.குமார் எழுதி இயக்கும் ‘கொற்றவை’ படத்தை பற்றி அவரே கூறுகிறார். சினிமா முன்னோட்டம்.
“கொற்றவை, உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் தயாராகும் படம். இவ்வகை படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமானவை. வரலாறும் புனைவும் கலந்து சொல்லும் இவ்வகை கதைகள், ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்.
இது, தமிழில் முதல் முயற்சி. இந்தப் படத்துக்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியிருக்கிறார். மயில் பிலிம்சுடன் இணைந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
கதையின் நாயகனாக ராஜேஷ் கனகசபை, கதைநாயகியாக சந்தனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். டைரக்டர்கள் வேலுபிரபாகரன், கவுரவ் நாராயணன் மற்றும் அபிஷேக், அனுபமா குமார், பவன், வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்”.
Related Tags :
Next Story






