பிறர் தர வாரா


பிறர் தர வாரா
x
தினத்தந்தி 28 Jan 2021 4:55 PM IST (Updated: 28 Jan 2021 4:55 PM IST)
t-max-icont-min-icon

காதல்-பாசம்-சஸ்பென்சுடன் கலந்த பிறர் தர வாரா படத்தின் முன்னோட்டம்.

குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்துக்கு, ‘பிறர் தர வாரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவேதா லோகஸ்ரீயுடன் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.காமராஜ் தயாரித்து டைரக்டு செய்திருப்பதுடன் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்தும் இருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறும்போது...

“சமுதாயத்துக்கு தேவையான ஒரு கருத்தை இந்தப் படத்தில் பதிவு செய்து இருக்கிறேன். காவல் துறையும், நீதி துறையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள ஒரு கட்டமைப்பாகும். இதில் எங்கு தவறு நடந்தாலும் பாதிப்பு மக்களுக்குத்தான். அதை எப்படி கையாள்வது என்பதை நேர்த்தியான திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறேன்.

படத்தில் காதல், பாசம், உறவுமுறை, சஸ்பென்ஸ் என அனைத்தும் இருக்கும். கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்” என்றார்.
1 More update

Next Story