6-வது முறையாக பிரசாந்துடன் இணைகிறார், சிம்ரன்

பிரசாந்த், சிம்ரன் ஆகிய இருவரும் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், ஜெய் ஆகிய 5 படங்களில் இணைந்து நடித்தார்கள். 6-வது முறையாக, ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம், ‘அந்தாதூன்’ என்ற இந்தி படத்தின், ‘ரீமேக்.’ வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், அது. 3 தேசிய விருதுகளை அள்ளியது. அந்த இந்தி படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பெறுவதற்கு பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். அதில் நடிக்க வேண்டும் என்று பல கதாநாயகர்கள் போட்டி போட்டார்கள்.
கடும் போட்டிக்கு இடையே நடிகர் தியாக ராஜன், ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றி இருக்கிறார். தமிழ் படத்தில், அவருடைய மகன் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் இவர் பியானோ கலைஞராக நடிக்கிறார். ‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டைரக்டர் ஜே.ஜே.பிரடரிக் இயக்குகிறார்.
‘அந்தாதூன்’ படத்தில், தபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அந்த வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க கார்த்திக்கும், யோகிபாபுவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story






