தேவதாஸ் பிரதர்ஸ்

4 கதாநாயகர்கள் 3 கதாநாயகிகளுடன் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
‘திலகர்,’ ‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களை தயாரித்தவர், வி.மதியழகன். இவர் இப்போது, சிம்பு-ஹன்சிகா ஜோடி நடிக்கும் ‘மஹா’ படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து, ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தில் துருவா, அஜய் பிரசாத், பாலசரவணன், ஹரி ஆகிய 4 கதாநாயகர்களும், சஞ்சிதா ஷெட்டி, சில்பா மஞ்சுநாத், ஆரா ஆகிய 3 கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். ஜானி டைரக்ஷன் செய்கிறார். இவர், டைரக்டர்கள் வேல்ராஜ், ஐஸ்வர்யா தனுஷ், பாண்டிராஜ் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். படப்பிடிப்பு சென்னை, தஞ்சை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
“இது, காதலர்களுக்கு அறிவுரை சொல்லும் காதல் கதை. பொதுவாக பெரும்பாலான காதல் தோல்வியில்தான் முடியும். அப்படி தோல்வி அடைந்தவர்கள், வாழ்க்கையே முடிந்து போனதாக கருதக்கூடாது. காதலுக்கும் மேலே வாழ்க்கை இருக்கிறது. அதை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டாடலாம் என்று புரியவைக்கும் கதை, இது” என்கிறார், டைரக்டர் ஜானி.
Related Tags :
Next Story






