கால் டாக்சி


கால் டாக்சி
x
தினத்தந்தி 3 Feb 2021 10:22 PM IST (Updated: 3 Feb 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

பின்னணியில் இருப்பவர்கள் யார்? ‘கால் டாக்சி’ டிரைவர்களின் தொடர் கொலைகள்

“தமிழ்நாட்டில், கால் டாக்சி டிரைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இந்த மர்ம கொலைகள் நகரில் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. கொலைகாரர்கள் யார், அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று துப்பறியும் வேலையில் போலீஸ் ஈடுபடுகிறது.

கொலைகாரன் சிக்கினானா, அவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பதை கருவாக வைத்து, ‘கால் டாக்சி’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது” என்கிறார், டைரக்டர் பா.பாண்டியன். அவர் மேலும் கூறியதாவது:

“ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘கால் டாக்சி’ படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நானே எழுதியிருக்கிறேன். கதாநாயகனாக சந்தோஷ் சரவணன் நடிக்க, அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடித்துள்ளார். இவர், ‘மெர்வின்,’ ‘மரகதக்காடு,’ ‘ஜீவி’ ஆகிய படங்களில் நடித்தவர்.

சேரன்ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதன்பாப், ஈ.ராமதாஸ், ‘பசங்க’ சிவகுமார், ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்தது. படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.”
1 More update

Next Story