கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திகில் படம்

தனுஷ் இதுவரை திகில் படத்தில் நடித்ததில்லை. அவர் முதன்முதலாக ஒரு திகில் படத்தில் நடிக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
தனுஷ்-கார்த்திக் நரேன் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது. படத்தை பற்றி அவர் கூறுகிறார்:
“இது, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 21-வது படம். மர்மங்கள் நிறைந்த திகில் படமாக தயாராகிறது. இதுபோன்ற ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ படத்தில், தனுஷ் இதுவரை நடித்ததில்லை. அவருடைய கதாபாத்திரமும், கதைக் களமும் புதுசாக இருக்கும்.
உணர்ச்சிகரமான காட்சிகள், படத்தின் சிறப்பு அம்சங்கள். நகர பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஜனரஞ்சகமான படமாக இருக்கும்” என்றார், கார்த்திக் நரேன்.
படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறுகையில், “தனுசின் திரையுலக பயணத்தில், இந்த படம் இன்னொரு மைல் கல்லாக இருக்கும். அதேபோல் குடும்பப்பாங்கான முகமும், நாகரீகமான தோற்றமும் கொண்ட நடிகைகள் வெகு சிலரே இருப்பார்கள். அதில், இந்த படத்தின் கதா நாயகி மாளவிகா மோகனனும் அடங்குவார். இரண்டு விதமான தோற்றங்களுக்கும் அவர் பொருந்துவார்” என்றார்.
Related Tags :
Next Story






