கொடூர வில்லனாக ஆர்யா


கொடூர வில்லனாக ஆர்யா
x
தினத்தந்தி 6 Feb 2021 5:57 PM IST (Updated: 6 Feb 2021 5:57 PM IST)
t-max-icont-min-icon

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க தொடங்கி உள்ளனர். விக்ரம் வேதா படத்தில் வில்லனாக வந்த விஜய் சேதுபதி சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார்.

இரும்புத்திரை இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க விஷாலிடம் பேசி வருகின்றனர். அர்ஜுன், கார்த்திக், எஸ்.ஜே.சூர்யா, அரவிந்தசாமி உள்ளிட்டோர் வில்லன் வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வரிசையில் ஆர்யாவும் இணைந்துள்ளார்.

விஷாலின் எனிமி படத்தில் ஆர்யா கொடூர வில்லனாக நடிக்கிறார். விஷாலுக்கு இணையாக ஆர்யாவின் வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளனர். முகத்தில் ரத்த காயம், ஒரு கையில் விலங்குடன் கோபமாக இருக்கும் ஆர்யாவின் வில்லன் தோற்றத்தை எனிமி படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகிறது. விஷால் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எனக்கு பிடித்தமான எதிரி ஆர்யா. இந்த படத்தில் உங்களை எனக்கு பிடிக்காது. ஆனால் நிஜ வாழ்க்கையில் எப்போதும் போலவே உங்களை விரும்புகிறேன். உங்களுடைய அனைத்து பலத்தையும் கொண்டு என்னை எதிர்க்க தயாராகுங்கள். இந்த படத்தில் நம் நட்பை மனதில் வைக்க முடியாது'' என்று கூறியுள்ளார்.
1 More update

Next Story