குட்டி லவ் ஸ்டோரி


குட்டி லவ் ஸ்டோரி
x
தினத்தந்தி 15 Feb 2021 2:29 AM IST (Updated: 15 Feb 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

எல்.கே.ஜி, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், தற்போது கோஷ்வா இமைபோல் காக்க, மூக்குத்தி அம்மன், சுமோ போன்ற படங்களை தயாரித்து வருகிறது. இப்படங்கள் எல்லாம் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி, நடிகைஅதிதி பாலன், அமலாபால், இசை எட்வின் லூயிஸ் விஸ்வநாத், ஓளிப்பதிவு சண்முக சுந்தரம்.

இந்நிலையில், வேல்ஸ் நிறுவனம், ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆந்தாலஜி வகையாக உருவாக்கப்பட இருக்கும் இப்படத்தை கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்குகிறார்கள்.
1 More update

Next Story