எஃப் ஐ ஆர்


எஃப் ஐ ஆர்
x
தினத்தந்தி 17 Feb 2021 9:44 PM IST (Updated: 17 Feb 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

புதுமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகஜால கில்லாடி'. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இப்படத்துக்கு 'எஃப்.ஐ.ஆர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்' என்று அர்த்தம் என படக்குழு குறிப்பிட்டுள்ளது .

இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தை சுஜாதா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதைத் தொடர்ந்து விக்ராந்துடன் நடிக்கும் புதிய படம், 'இன்று நேற்று நாளை 2', 'ஜெர்ஸி' தமிழ் ரீமேக், 'ஜீவி' இயக்குநரின் அடுத்த படம், 'காடன்', வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் படம் என பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் விஷ்ணு விஷால்.
1 More update

Next Story