அக்கா குருவி


அக்கா குருவி
x
தினத்தந்தி 19 Feb 2021 9:00 PM IST (Updated: 19 Feb 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

அமலாபாலை சர்ச்சைக்குரிய நாயகியாக மாற்றிய டைரக்டரின் புதிய படம் அக்கா குருவி படத்தின் சினிமா முன்னோட்டம்.

புகழ்பெற்ற ஈரானிய டைரக்டர் மஜித் மஜிதி இயக்கி, 1997-ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு போட்டி போட்ட படம், ‘சில்ரன் ஆப் ஹெவன்’. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. உயரிய விருதுகளை குவித்தது. அந்த படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை பெற்று, ‘அக்கா குருவி’ என்ற பெயரில், தமிழில் டைரக்டர் சாமி படமாக்கி இருக்கிறார்.

இவர், உயிர், மிருகம், சிந்து சமவெளி ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். சிந்து சமவெளி படத்தில் படுதுணிச்சலான காட்சிகளில் அமலாபாலை நடிக்க வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியவர், இவர்தான். ‘அக்கா குருவி’ படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ புகழ் கதிர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முழு படப்பிடிப்பையும் கொடைக்கானலுக்கு அருகில் உள்ள பூம்பாறை என்ற கிராமத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள்.
1 More update

Next Story