ருத்ரதாண்டவம்

வில்லனாக நடிக்கிறார், டைரக்டர் கவுதம் மேனன் ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
கடந்த 2007-ம் வருடம் திரைக்கு வந்த ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். முன்னணி டைரக்டர்களில் ஒருவரான இவர், ஆரம்ப காலத்தில் அவர் இயக்கும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
அதன்பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். இப்போது தயாராகி வரும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார்.
கதாநாயகனாக ரிஷி ரிச்சர்ட் நடிக்கிறார். ‘சின்னத்திரை’ நடிகை தர்ஷா குப்தா கதாநாயகியாக களம் இறங்குகிறார். மோகன் ஜி. டைரக்டு செய்கிறார். 7ஜி.சிவா தயாரிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
Related Tags :
Next Story






