ஐஸ்வர்யா முருகன்


ஐஸ்வர்யா முருகன்
x
தினத்தந்தி 20 Feb 2021 9:41 PM IST (Updated: 20 Feb 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

காதலின் 2 பக்கங்களை கூறும் ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தின் முன்னோட்டம்

“காதல் என்பது சுகமானதுதான், சுவையானதுதான். அதன் விளைவுகள் சில நேரங்களில் இன்பமானதுதான். ஆனால் பல நேரங்களில் அதன் விளைவுகள் வலி நிறைந் தவை. அப்படி வலி நிறைந்த இருள் பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம், இது” என்கிறார், ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தின் டைரக்டர் ஆர்.பன்னீர்செல்வம். இவர், ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கியவர். படத்தை பற்றி மேலும் சொல்கிறார்:

“காதல் அழகானதுதான். ஆனால் அந்த பூ எந்த சந்தர்ப்பத்தில் மலரும் என்பதை யாரும் கணிக்க முடியாது. அப்படி இருவர் இடையே மலரும் காதல் சில நேரங்களில் 2 குடும்பங்களையும் வேரோடு அசைத்து நிலைகுலையச் செய்து விடுகிறது.

ஒரு புன்னகை மலரும்போது, ஒரு கண்ணீர் துளி அரும்ப வேண்டும் என்கிற நியதி எதுவும் இல்லை. ஆனால், அது காதலில் நிகழ்கிறது. அப்படி ஒரு காதலின் வலி நிறைந்த பக்கங்களை சொல்வதுதான், ‘ஐஸ்வர்யா முருகன்.’

இருவரும் சேர்ந்ததுடன் அந்த காதல் கதை முடிந்து விடுவதில்லை. அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. தாங்கள் எதையோ இழந்து விட்டதாக இரு குடும்பங்களும் பரிதவிக்கின்றன, கொந்தளிக்கின்றன. அதன் விளைவுகள் மூர்க்கமாக, வன்முறையாக வெளிப்படுகின்றன.

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வு அல்ல. காதலுக்கு மட்டும் அதைத் தீர்வாக ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்? என்று இந்தப் படம் கேள்வி கேட்கிறது.

படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள் கதாநாயகன் அருண்பன்னீர்செல்வம், கதாநாயகி வித்யா பிள்ளை.

மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில், 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்து இருக்கிறோம். இந்தப் படம் ஒரு அசலான திரைப்பதிவாக தியேட்டர்களில் வெளியாகும்.”
1 More update

Next Story