மின்னல் முரளி


மின்னல் முரளி
x
தினத்தந்தி 12 Sept 2021 7:15 PM IST (Updated: 12 Sept 2021 7:15 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகர் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத்தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார்.  “மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள  லோகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
1 More update

Next Story