அருண் விஜய்யின் அதிரடி படம்


அருண் விஜய்யின் அதிரடி படம்
x
நடிகர்: அருண் விஜய் நடிகை: எமி ஜாக்சன், நிமிஷா சஜயன்  டைரக்ஷன்: விஜய் இசை: ஜி.வி.பிரகாஷ் 

அருண் விஜய் தற்போது ஒரு அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

விஜய் இயக்கியுள்ள புதிய படம் `மிஷன் சாப்டர் 1'. இதில் அருண் விஜய் நாயகனாகவும் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து அருண் விஜய் கூறும்போது, ``தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து சிறைச்சாலை பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. என்னை ஜெயிலுக்கு அனுப்பியது யார்? அதில் இருந்து தப்பினேனா? என்பது கதை. என் மகளாக இயல் மற்றும் லண்டனில் உள்ள நர்சாக நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். லண்டன் சிறை அதிகாரி வேடத்தில் எமிஜாக்சன் வருகிறார்.

லண்டனில் ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. அங்கு சண்டை காட்சியில் நடித்தபோது எனது காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டது. ஆனாலும் கஷ்டப்பட்டு தொடர்ந்து நடித்தேன். சிகிச்சையும் எடுத்தேன். பின்னர் சென்னையில் உள்ள பின்னி மில்லில் ரூ.5 கோடி செலவில் 4.5 ஏக்கரில் பிரமாண்ட ஜெயில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். 250 வெளிநாட்டு நடிகர்-நடிகைகளை சென்னைக்கு வரவழைத்து படப்பிடிப்பில் பங்கேற்க செய்தோம். பெரும்பகுதி கதை சிறையிலேயே நடக்கும்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் லைகா பட நிறுவனம் வெளியிடுகிறது'' என்றார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story