திரில்லர் கதையில் மம்முட்டி


திரில்லர் கதையில் மம்முட்டி
x
நடிகர்: மம்முட்டி ,அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் நடிகை: அமல்டா லிஸ்  டைரக்ஷன்: ராகுல் சதாசிவன் இசை: கிறிஸ்டோ சேவியர் ஒளிப்பதிவு : ஷெஹ்னாத் ஜலால்

மம்முட்டி நடிப்பில் `பிரமயுகம்' என்ற தமிழ் படம் தயாராகிறது. இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ராகுல் சதாசிவன் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``மம்முட்டியை இயக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். `பிரமயுகம்' கேரளாவின் இருண்ட காலத்தை மையமாகக் கொண்ட கதை. இதை ஒரு சிறந்த திரைப்பட அனுபவமாக மாற்றுவதற்காக தயாரிப்பாளர்களின் ஆதரவைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகம் முழுவதும் உள்ள மம்முட்டி ரசிகர்களுக்கும், திரில்லர் வகை திரைப்பட ரசிகர்களுக்கும் இது ஒரு விருந்தாக இருக்கும்'' என்றார். நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் சார்பில் சக்ரவர்த்தி ராமச்சந்திரா, எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஒளிப்பதிவு: ஷெஹ்னாத் ஜலால், இசை: கிறிஸ்டோ சேவியர். இந்தப் படத்தை மேலும் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

1 More update

Next Story