இளையராஜா பாராட்டிய பள்ளிக்கூட காதல் கதை


இளையராஜா பாராட்டிய பள்ளிக்கூட காதல் கதை
x
நடிகர்: பிரஜன்,ரெடின் கிங்ஸ்லி நடிகை: மனிஷா யாதவ்  டைரக்ஷன்: ஆதிராஜன் இசை: இளையராஜா ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜி.

இளையராஜா இசையில் `நினைவெல்லாம் நீயடா' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக பிரஜன், நாயகியாக மனிஷா யாதவ் நடித்துள்ளனர். சினாமிகா, ரோஹித், யுவலட்சுமி, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆதிராஜன் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பை முடித்து பின்னணி இசையமைப்பதற்காக இளையராஜாவுக்கு இயக்குனர் படத்தை போட்டு காண்பித்தபோது `பரவாயில்லையா.. நல்லா எடுத்திருக்க' என்று பாராட்டியதுடன் உடனடியாக உற்சாகத்துடன் பின்னணி இசை கோர்ப்பு பணிகளை தொடங்கி மூன்றே நாட்களில் முடித்துக் கொடுத்துள்ளார். இது இளையராஜாவுக்கு 1,417-வது படம். பள்ளிக்கூட காதலை மையமாக வைத்து தயாராகி உள்ளது. ஒளிப்பதிவு: ராஜா பட்டாசார்ஜி.

1 More update

Next Story