மணல் திருட்டின் மறுபக்கம் - ‘வீராபுரம் 220’ விமர்சனம்


மணல் திருட்டின் மறுபக்கம் - ‘வீராபுரம் 220’ விமர்சனம்
x
தினத்தந்தி 30 Sep 2021 12:34 PM GMT (Updated: 30 Sep 2021 12:34 PM GMT)

பி செந்தில் குமார் இயக்கத்தில் மகேஷ், மேகனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வீராபுரம் 220’ படத்தின் விமர்சனம்.

கதாநாயகன் - கதாநாயகி: ‘அங்காடி தெரு’ மகேஷ், மேக்னா.

டைரக்டர்: எஸ்.செந்தில்குமார்.

கதையின் கரு: மணல் கடத்தல்காரனால் பாதிக்கப்பட்ட நண்பர்கள்.

மணல் கடத்தல்காரனால் பாதிக்கப்படும் நண்பர்கள், கடத்தல்காரனை எப்படி பழிவாங்குகிறார்கள்? என்பதே கதை.

5 நண்பர்கள், அவர்களின் சின்ன சின்ன பிரச்சினைகள், காதல் சோகங்கள் என்று இளைஞர்களுக்கே உரிய இன்ப துன்பங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்தநிலையில், அந்த சிறு நகரத்தில் விபத்து என்ற பெயரில், தொடர் கொலைகள் நடக்கின்றன. அதில் கதாநாயகனின் தந்தையும் ஒருவர். தந்தையை இழந்த கதாநாயகன் என்ன செய்கிறான்? என்பது ‘கிளைமாக்ஸ்.’

சமீபகாலமாக எல்லா கதைகளும் சென்னை பக்கமாகவே பேயாக சுற்றிக்கொண்டிருக்கும்போது, இந்த கதை தென் தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை சுற்றுகிறது.

‘அங்காடி தெரு’ மகேஷ் தவிர, மற்ற நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள். இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை பாசாங்கு இல்லாமல் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் காதல், போதை, நட்பு ஆகிய மூன்றையும் இயல்பாக பதிவு செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் சதீஷ், மிக பொருத்தமான தேர்வு.

படத்தின் முதல் பாதியில் காதல், சண்டை என வழக்கமான மசாலாக்கள். இடைவேளைக்கு பின்பே மணல் கடத்தல் காட்டப்படுகிறது. சிறு பட்ஜெட் முதலீடு என்பது படம் எங்கும் தெரிகிறது.

காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பிரேம்குமார் ஒளிப்பதிவு. பின்னணி இசையில் உயிர் இல்லாததால், காட்சிகளில் கனம் இல்லை. சிறு பட்ஜெட்டில் ஒரு கருத்துள்ள படம்.


Next Story