சினிமா செய்திகள்

“கொரோனா ஊரடங்கில் தமிழ் கற்றேன்” - நடிகை ராசிகன்னா + "||" + Actress Rashikanna Deepavali Interview

“கொரோனா ஊரடங்கில் தமிழ் கற்றேன்” - நடிகை ராசிகன்னா

“கொரோனா ஊரடங்கில் தமிழ் கற்றேன்” - நடிகை ராசிகன்னா
கொரோனா ஊரடங்கில் தமிழ் கற்று கொண்டதாக நடிகை ராசிகன்னா கூறி உள்ளார்.
மும்பை
 
தமிழ் பட உலகுக்கு மும்பையில் இருந்து இறக்குமதியான ஒரு புதிய வரவு, ராசிகன்னா. இவர் இப்போது தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவரது பேட்டி:

தமிழ்ப் படங்களில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

எனக்கு பொதுவாகவே நடிப்பு பிடிக்கும். குறிப்பாக தமிழ் படங்களில் நடிப்பது பிடிக்கும். தமிழ் ரசிகர்கள் மொழி வேறுபாடு பார்ப்பது இல்லை. நான் இங்கு இன்னும் புதுமுகம்தான். சினிமாவில் இன்னும் பல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. இங்கு கலவையான ரசனை இருப்பதால் பலவிதமான படைப்புகளை தரலாம். எல்லா வகை சினிமாக்களையும் இங்குள்ள ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.

உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார், ஏன்?

பிடித்த தமிழ் நடிகர்களின் பட்டியல் வெகுநீளமாக உள்ளது. நான் இணைந்து நடிக்க விரும்பும் பல கதாநாயகர்கள் இங்கே இருக்கிறார்கள். விஜய்யின் நடிப்பும், நடனமும் பிடிக்கும்.

எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. நடிகர், நடிகைகளை பலவிதமான மேக்கப் மற்றும் பலவிதமான வேடங்களில் பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். தெலுங்கில் நான் நடித்த சில காதல் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அப்படி ஒரு காதல் படத்தில், தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு வரலாற்று கதையிலும் நடிக்க வேண்டும். சவாலான கதாபாத்திரங்களில் தோன்றவும் ஆசைப்படுகிறேன். இதற்காக கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டேன்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடிக்கும்போது என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

மொழி மட்டுமே மாற்றம். வேறு எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. இரு மொழிகளிலும் ரசிகர்களின் ரசனையில் சிறிய மாற்றங்கள் உள்ளன.

உங்களின் தீபாவளி கொண்டாட்டம் எப்படியிருக்கும்?

சிறு வயதில் எல்லோரையும் போல் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி இருக்கிறேன். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டபின், பட்டாசு வெடிப்பதில்லை. வழக்கமாக ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் பெற்றோர்களுடன் தீபாவளி கொண்டாடுவேன். இந்த வருடம் சென்னையில் படப்பிடிப்பு இருக்கிறது. சென்னையில்தான் தீபாவளி கொண்டாட்டம். அம்மாவிடமும், அப்பாவிடமும் வீடியோ காலில் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வேன். ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர்
விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.
2. தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்
தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி, மோசமாக பேசினார் என்று இன்டீரியர் டிசைனர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
3. பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வயதில் காலமானார்
4. கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா
விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்து உள்ளார்.
5. யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...!
குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது.