தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து மனந்திறந்த நடிகை டாப்சி
தனது வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து நடைகை டாப்சி பன்னு மனந்திறந்து பேட்டி அளித்து உள்ளார்.
மும்பை
தமிழில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி இந்தியில் பிங்க், பத்லா, மன்மர்ஸியான் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் முக்கியக் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்துப் கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-
"ஒரு கதாநாயகனின் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால் நான் ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முறை படத்தின் நாயகனுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை என்பதால் என்னை அதை மாற்றச் சொன்னார். ஆனால் நான் மறுத்த போது வேறொரு டப்பிங் கலைஞரை வைத்துப் எனக்குத் தெரியாமல் பேச வைத்தார்கள்.
ஒரு படத்தில் நாயகனின் காட்சியை விட எனது அறிமுகக் காட்சி சிறப்பாக இருந்ததால் எனது காட்சியை மாற்ற வைத்தார். ஒரு நாயகனின் முந்தைய திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதால் எனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.
இப்படி என் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பத்தில் பலவிதமான எதிர்மறை அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் பணியாற்றுவதில் மகிழ்ச்சி தரும் திரைப்படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்த பிறகு ஒரு சில நாயகர்கள், அந்த நாயகியை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டுமா என்று தயங்க ஆரம்பித்துவிடுவார்கள் என கூறினார்.
தமிழில் கடைசியாக கேம் ஓவர் திரைப்படத்தில் நடித்திருந்தார் டாப்சி அடுத்ததாக ஜன கண மன திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story