நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் வளர்ச்சி - சாய் பல்லவி


நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் வளர்ச்சி - சாய் பல்லவி
x
தினத்தந்தி 22 Dec 2020 4:00 AM IST (Updated: 22 Dec 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்துள்ள சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது.

ஆண், பெண் வித்தியாசம் எல்லா துறையிலும் இருக்கிறது. சினிமா துறையில் அது வெளிப்படையாக தெரியும். அனுஷ்கா, நயன்தாரா போன்ற நடிகைகளால் கதாநாயகிகளாலும் படம் முழுக்க கதையை தங்கள் தோளில் சுமக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் நம்ப ஆரம்பித்து உள்ளனர். இதன் மூலம் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் வளர்ச்சி அடைய தொடங்கி உள்ளனர். முந்தையை நிலைமையை ஒப்பிடும்போது இப்போது வலுவான கதாபாத்திரங்கள் நடிகைகளுக்கு கிடைக்கிறது. ஆனால் நடிகர்களைப்போல் நடிகைகளை சமமாக பார்க்கிறார்களா என்றால் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. எனது விஷயத்தில் கதாநாயகன் ராணாவை பாராட்ட வேண்டும். அவர் நடிகையும் நடிகரும் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். நடிகைக்கு கதாபாத்திரம் எவ்வளவுதான் முக்கியத்துவம் உள்ளதாக இருந்தாலும் போஸ்டரில் நடிகர் பெயர்தான் இருக்கும். ஆனால் விராட பருவம் படத்தில் டைட்டில் கார்டில் ராணா பெயருக்கு முன்னால் எனது பெயர் வரும். இதை நான் கேட்கவில்லை. ராணாவே முதலில் எனது பெயரையும், இரண்டாவது அவரது பெயரையும் போடும்படி சொல்லி செய்து இருக்கிறார். இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

Next Story