‘15 கிலோ உடை அணிந்து நடித்த அனுபவம்’ - நடிகை ராய்லட்சுமி பேட்டி


‘15 கிலோ உடை அணிந்து நடித்த அனுபவம்’ - நடிகை ராய்லட்சுமி பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2021 5:50 PM GMT (Updated: 2021-09-23T23:20:23+05:30)

‘15 கிலோ உடை அணிந்து நடித்த அனுபவம்’ - நடிகை ராய்லட்சுமி பேட்டி.

கொரோனா பொது முடக்கத்தால் முடங்கியிருந்த திரையுலகம், இப்போது புத்துயிர் பெற்று இயங்கி வருகிறது. தியேட்டர்கள் திருவிழாக்கோலம் கண்டுள்ளன. நிறைய படங்கள் திரைக்கு வர தயாராக வரிசையில் காத்திருக்கின்றன. அதில் ராய்லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். அவர் கூறியதாவது:-

இது ஒரு பேய் படம் தான். ஆனால் பேய் படங்களுக்கே உரிய ‘பார்முலா’ இருக்காது. ராய்லட்சுமி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். ‘சிண்ட்ரெல்லா’ கதாபாத்திரத்தில் அவர் தான் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்காக மும்பையில் விசேஷ உடை தயார் செய்யப்பட்டது. 15 கிலோ எடையுள்ள உடையை அணிந்தபடி, 15 நாட்கள் நடித்தார்.

இவ்வாறு இயக்குனர் வினோ வெங்கடேஷ் கூறினார்.

இதுபற்றி நடிகை ராய்லட்சுமி கூறியதாவது:-

“இதுவரை என்னை கவர்ச்சியாக மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு, இந்த படம் மாற்றமாக இருக்கும். தோற்ற மாற்றத்துடன், நடிப்பிலும் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும். ரசிகர்களுக்கு முழு திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.”

மேற்கண்டவாறு நடிகை ராய்லட்சுமி கூறினார்.Next Story