தமிழ் சினிமாவில் மழைப் பாடல்கள் கதாநாயகியை திட்டமிட்டு கொலை செய்வது போன்றது- நடிகை ஷோபனா வேதனை


தமிழ் சினிமாவில் மழைப் பாடல்கள் கதாநாயகியை திட்டமிட்டு கொலை செய்வது போன்றது- நடிகை ஷோபனா வேதனை
x

ஷோபனா இதுவரை தனது கடினமான படம் மணிரத்னத்தின் தளபதி என்று கூறினார்.

சென்னை

தேசிய விருது பெற்ற நடிகையம் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞருமான ஷோபனா. சமீபத்தில் சுஹாசினி மணிரத்னத்துடன் ஒரு நேர்காணலில், தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சிவா (1989) படத்தில் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை ஷோபனா கூறியதாவது:-

சிவா படத்தில் ஒரு மழைக் காட்சியைப் படமாக்கினார்கள். அதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை, ஆனால் உடையைப் பார்த்து நான் அதைப் பற்றி அறிந்து கொண்டேன்.

ஒரு வெள்ளை வெளிப்படையான புடவை இது மழை பாடல் என்று எனக்குப் புரிந்தது. காஸ்ட்யூம் பையன் நான் சொன்னேன். உள்ளே உடுத்த எதுவும் இல்லை.நான் வீட்டுக்கு வந்து ரெடியாகி வரலாமா என்று கேட்டபோது.

பத்து நிமிடத்தில் ஷாட் ரெடியாகும் ஆகும் என்றார். இது (மழை பாடல்) திட்டமிட்ட கொலை என்று நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர் குறித்து மட்டும் தெரியாது (சிரிக்கிறார்).

ரஜினிகாந்த் எப்போதும் ஒரு ஜென்டில்மேன். ரஜினி எனது பிரச்சனைகளை புரிந்து கொண்டார்.

இது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் என்னால் படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு விரும்பவில்லை. எனவே, ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த ஒரு பிளாஸ்டிக் டேபிள் கவரை எடுத்து பாவாடைக்குள் சுற்றிக் கொண்டேன். ஷூட்டிங்கிற்கு தயாராக படப்பிடிப்பின் போது ரஜினி சார் என்னை தூக்கி நடனமாட, அப்போது பிளாஸ்டிக் டேபிள் கவர் சத்தம் வர ஆரம்பித்தது. ரஜினியின் முகபாவனை மாறியது அவரது முகபாவனை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.அதிர்ஷ்டவசமாக, அவர் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என கூறினார்.

ஷோபனா இதுவரை தனது கடினமான படம் மணிரத்னத்தின் தளபதி என்று கூறினார்.

அந்த அனுபவம் குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

"படப்பிடிப்பு நேரம் கடினமாக இருந்தது. அதிகாலையில்... எப்பொழுதும், ரஜினி சாருக்கும் மணி சார்க்கும் இடையில் ஒரு முட்டல் இருக்கும். 3 மணிக்கு 300 பேர் வரலாம் என்றால் ஏன் ஒருவரால் முடியாது?' என மணிரத்னம் கேள்வி எழுப்புவார்

சரியான நேரத்தில் வந்த 300 பேரில் நானும் இருந்தேன். படம் பெரிய அளவில் எடுக்கப்பட்டது மற்றும் அந்த நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக கடினமாக இருந்தது என குறிப்பிட்டார்.

உரையாடலின் போது, சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஷோபனா இருவரும், ஹீரோயின்களுக்கு மானிட்டரைப் பார்க்கும் பாக்கியம் கூட இல்லை என்று குறிப்பிட்டனர். தற்போது அவைகள் நன்றாக மாறிவிட்டன என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


Next Story