பாலியல் நோக்குடன் அணுகிய நபர்களை எதிர்கொண்ட தருணம்... பிரபல நடிகை பரபரப்பு பேட்டி


பாலியல் நோக்குடன் அணுகிய நபர்களை எதிர்கொண்ட தருணம்... பிரபல நடிகை பரபரப்பு பேட்டி
x

திரையுலகில் பாலியல் நோக்குடன் அணுகிய நபர்களை எதிர்கொண்ட தருணம் பற்றி பிரபல நடிகை பேட்டியில் தெரிவித்து உள்ளார்.


புனே,


இந்தி திரையுலகை சேர்ந்த நடிகை நர்கீஸ் பக்ரி. ராக்ஸ்டார் படத்தில் நடித்ததில் இருந்து ரசிகர்கள் பலரது மனதில் இடம் பிடித்து விட்டார். தவிரவும், மெயின் தேரா ஹீரோ, மெட்ராஸ் கபே, அசார் மற்றும் பல படங்களில் நடித்து உள்ளார்.

உணர்வுபூர்வ விசயங்களை பற்றி பேசும்போது நேர்மையான கருத்துகளை வெளியிடுவதில் இருந்து விலகி செல்லாதவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பாலியல் துன்புறுத்தல் நிகழ்வை எதிர்கொண்டது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நர்கீஸ் பக்ரி, ஆம். சிலரை கடந்து வந்தேன். என்னிடம் அதுபோன்ற எண்ணத்துடன் சிலர் அணுகினர். ஆனால், இந்த ஆசாமிகளிடம் இருந்து விலகி எப்படி ஓர் எல்லையை வகுத்து கொள்ள வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும் என அவர் கூறுகிறார்.
சிலர் கூறுவதுண்டு. தகுதியுடைய நபர்களே தப்பி பிழைப்பார்கள் என்று. ஆனால், நான் அதுபோன்று எதுவேண்டும் என்றாலும் செய்ய கூடிய நபர் இல்லை என கூறுகிறார். அப்படி இல்லாமல் இருப்பது தனது மனநலத்திற்காக என்றும் நர்கீஸ் கூறுகிறார்.

இதற்கு அவர் கூறும் விளக்கம் என்னவெனில், நான் யாரென்று என்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்கு தெரியும் என்று அவர் கூறுகிறார். என்னுடைய மன, உடல் நலம் சார்ந்த விசயங்களை கவனித்து கொள்வதே அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்று நர்கீஸ் கூறுகிறார்.

நடிப்பு தொழில் பற்றி கூறும்போது அவர், உண்மையில் நான் அதிர்ஷ்டம் வாய்ந்தவள். மற்றவர்கள் கூறுகிற கொடூர விசயங்கள் எல்லாம் எனக்கு நடக்கவில்லை.

ஆனால், உங்களுக்கே தெரியும். சிலர் உங்களை தங்கள் பக்கம் ஈர்க்க அல்லது இதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது அல்லது அதற்கும் மேலாக ஏதேனும் செய்ய கூடியவர்கள் இருக்கிறார்கள் என்று நன்றாக உங்களுக்கு தெரியும்.

ஆனால் நான், எனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொள்வது போன்றே இதுபோன்ற விசயங்களில் செயல்படுவேன். ஒவ்வொருவரிடம் இருந்தும் நான் விலகியே இருக்கிறேன். ஏனெனில் உண்மையில், அதுபோன்ற தருணங்களில் எந்தவொரு மனிதரும் தன்னை திறம்பட வைத்து கொண்டு செயல்பட முடியாது.

அவை எல்லாவற்றிலும் இருந்து விலகி இருக்கவே முயற்சி செய்கிறேன். எப்படி ஓர் எல்லையை உருவாக்கி வைத்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று நர்கீஸ் பக்ரி கூறுகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு, பேட்டி ஒன்றில் பாலிவுட் திரையுலகை பற்றி நர்கீஸ் கூறும்போது, திரை இயக்குனர்களிடம் நிர்வாண கோலத்தில், ஆடையின்றி ஒன்றாக படுக்க மறுத்து விட்டதற்காக பல பட வாய்ப்புகளை இழந்தேன் என கூறினார்.

அது மனதளவில் பாதித்தது. எனக்கென்று ஒரு தரம் உள்ளது. எல்லையும் உள்ளது. ஆனால், பல முறை இதுபோன்ற விசயங்களுக்காக நான் வெளியேற்றப்பட்டது என்னை மோசம் ஆக உணர செய்தது. ஆனால், நல்ல மனிதர் வெற்றி பெறுவார் என எனக்கு தெரிய வந்தது.

அவர்களுடைய வழியை பிடித்து கொண்டு நாம் வெற்றி பெற கூடாது. நீங்கள் ஒரு வழியில் சென்று வெற்றியை உங்களுக்கு உரிய ஒன்றாக ஆக்கி கொள்ள வேண்டும் என்று நர்கீஸ் பக்ரி அப்போது கூறினார்.


Next Story