நடந்து முடிந்த கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...!


நடந்து முடிந்த கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...!
x
தினத்தந்தி 10 Dec 2021 2:55 AM GMT (Updated: 10 Dec 2021 2:55 AM GMT)

தங்கள் திருமண புகைப்படங்களை முதல் முறையாக கத்ரினா கைப் - விக்கி கவுசல் தம்பதி தங்களது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராஜஸ்தான் ,

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம்  ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது .நீண்ட நாட்களாக காதலித்து வந்த கத்ரினா கைப் - விக்கி கவுசல்  ஜோடி நேற்று தங்களது திருமண வாழ்வை தொடங்கியுள்ளனர் . ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. 

இவர்களது ஆடம்பர திருமணத்திற்காக கடந்த சில நாட்களாகவே கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் சிக்ஸ் சென்ஸ் கோட்டை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.8 லட்சம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில்  கத்ரீனாவும் விக்கியும் தங்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அமேசான் தளத்தில் ஒளிபரப்பு  செய்யப்படுவதற்கு முன்பு திருமணத்திலிருந்து எந்த வீடியோவும்  கசிந்துவிடாது கூடாது  என்பதற்காக  கத்ரீனாவும் விக்கியும் தங்கள் விருந்தினர்களை அது சமந்தமான ஒப்பந்தகளில்  கையெழுத்திட வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.  

இந்த நிலையில் தங்கள் திருமண புகைப்படங்களை முதல் முறையாக கத்ரினா கைப் - விக்கி கவுசல் தம்பதி தங்களது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கத்ரினா - கவுசல் தம்பதிக்கு தற்போது பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் இன்னும் சில நாட்களில் மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல நடிகர் , நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர். 

Next Story