போயஸ் கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து..!


போயஸ் கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து..!
x
தினத்தந்தி 14 Jan 2022 10:58 AM IST (Updated: 14 Jan 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பொங்கல் பண்டிகை. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில் பொங்கல் வாழ்த்துகளைக் கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆரோக்கியத்தை மிஞ்சியது எதுவுமே இல்லை. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. 

இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் வெளியே திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தார்.

Next Story