நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா - அமீரக அரசு கவுரவம்
ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.
அபுதாபி,
ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.
ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். தொடர்ந்து நடிகை அமலா பால், லட்சுமி ராய், பாடகி சித்ரா மற்றும் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெற்றார்.
இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எங்களைப் போன்ற திரைக் கலைஞர்களுக்கு இந்த நாடு எப்போதும் ஊக்கமளித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால ஒத்துழைப்புக்கு நன்றியுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy to have received UAE’s Golden visa. This country has always been such huge encouragement for artists like us. Grateful and looking forward to future collaborations in the UAE.
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 3, 2022
Big thank you to Mr Muhammed Shanid of Juma Almheiri, Suresh Punnasseril and Naressh Krishna pic.twitter.com/XDuuO4boPG
Related Tags :
Next Story