ஆஸ்கர் விருது விழா; கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை!


Image Courtesy:https://variety.com/
x
Image Courtesy:https://variety.com/
தினத்தந்தி 10 Feb 2022 10:53 AM IST (Updated: 10 Feb 2022 10:54 AM IST)
t-max-icont-min-icon

நடப்பாண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


வாஷிங்டன், 

உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு 'பெல்பாஸ்ட்(Belfast)', 'கோடா (CODA)', 'டோண்ட் லுக் அப்(Don’t Look Up)', 'டிரைவ் மை கார்(Drive My Car)',  ‘டியூன்(Dune)', 'கிங் ரிச்சர்டு(King Richard)', 'லிக்கொரைஸ் பீஸா(Licorice Pizza)', 'நைட்மேர் அலே(Nightmare Alley)', 'தி பவர் ஆப் தி டாக்(The Power of the Dog)', 'வெஸ்ட் சைடு ஸ்டோரி(West Side Story)' ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்தாதோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், கொரோனா கட்டுப்பாடுகள் மிகத்தீவிரமாக கடைபிடிக்கப்பட்டன. இந்த முறை கொரோனா தடுப்பூசியை பெரும்பாலானோர் செலுத்தி கொண்டுள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விதிக்கப்பட்டுள்ள உள் அரங்க நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளின்படி, ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும். அதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால் விழாவின் பிற விருது பட்டியல்களான, ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட்(திரை நடிகர்கள் சங்கம்) மற்றும் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் சங்கம் ஆகியவற்றில் கலந்துகொள்ள உள்ளவர்கள், கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த கட்டுப்பாடுகள், விழாவில் விருதுகளை வழங்குவோர், விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

Next Story