கவர்னரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் - தமிழிசை சவுந்தரராஜன்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 April 2022 9:38 PM IST (Updated: 16 April 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

கவர்னரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து திமுகவும் புறக்கணிப்பதாக அறிவித்தது.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கவர்னரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கவர்னரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இது தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததல்ல. அனைத்திலும் அரசியல் புகுத்தினால், யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது என்று கூறினார்.

Next Story