பழைய நாட்குறிப்பு லேம்ப் ஹோல்டர்
பழையதாகிவிட்ட சென்ற வருட நாட்காட்டிகளை கொண்டு பயனுள்ள கைவினை பொருட்கள் செய்வது பற்றி பார்க்கலாம்.
புது வருடம் தொடங்கியதால், புது புது நாட்காட்டிகள் வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கும். பழையதாகிவிட்ட சென்ற வருட நாட்காட்டிகளை என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அவற்றைக் கொண்டு பயனுள்ள கைவினைப் பொருட்கள் செய்யலாம். இதற்கு சில நிமிட பொறுமையும், கொஞ்சம் கற்பனைத்திறனும் இருந்தால் போதும். இதோ ஒரு வித்தியாசமான செய்முறை குறிப்பு…
தேவையான பொருட்கள்:
பழைய மாத காலண்டர் - 1
வண்ண காகிதங்கள் - 4
பசை - 1
கத்தரிக்கோல் - 1
செய்முறை:
1. பழைய மாத நாட்காட்டியில், ஒரு தாளை மட்டும் எடுத்து அதை நான்கு மடிப்புகளாக மடிக்கவும்.
2. பின்பு தாளை விரித்து நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
3. படத்தில் காட்டியுள்ளபடி, தாளை சுருட்டி அதன் முனையில் பசை தடவி ஒட்டவும்.
4. இதேபோல் மேலும் சில காகித சுருள்களை செய்யவும்.
5. இப்போது இரண்டு காகித சுருள்களை சற்று இடைவெளி விட்டு நேராக வைக்கவும். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் பசை தடவி கிடைமட்டமாக புதிய சுருள் வைத்து ஒட்டவும்.
6. நேராகவும், கிடைமட்டமாகவும் மாற்றி மாற்றி அனைத்து காகித சுருள்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து ஒட்டவும்.
7. இப்போது வண்ணக் காகிதத்தை 20x13 சென்டிமீட்டர் என்ற அளவில் வெட்டிக்கொள்ளவும்.
8. காகித சுருளின் உள் பகுதியில், அனைத்து பக்கங்களிலும் பசை தடவவும்.
9. வெட்டிய வண்ணக் காகிதத்தை, காகித சுருளின் உள் பகுதியின் நான்கு புறத்திலும் ஒட்டவும்.
10. காகித சுருளுக்குள் நுழையும் அளவுள்ள மின் விளக்கைப் பொருத்தினால் அழகான ‘லேம்ப் ஹோல்டர்’ தயார்.
Related Tags :
Next Story