அழகு சாதனப் பொருட்கள் வாங்கும்போது...


அழகு சாதனப் பொருட்கள் வாங்கும்போது...
x
தினத்தந்தி 18 Oct 2021 5:47 PM IST (Updated: 18 Oct 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு ஒப்பனைப் பொருளிலும் பல வகையான வாசனைப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் சருமத்துக்கு ஏற்றதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சருமத்துக்குச் சரியாகப் பொருந்தும் வகையிலான ஒப்பனைப் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்.

பெண்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று, தங்களை அழகுபடுத்திக் கொள்வது. இதற்காக உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சந்தையில் பலவிதமான ஒப்பனைப் பொருட்கள் கிடைக்கின்றன. 

இவற்றில் எதை வாங்குவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். எதை வாங்குவதாக இருந்தாலும், முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஒப்பிடுதல்:
சந்தையில் கிடைக்கும் மற்ற ஒப்பனைப் பொருட்களுடன், நீங்கள் தேர்ந்தெடுக்கும்  பொருள் எந்த வகையில் சிறந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதை வாங்குவதற்குச் சிறந்த இடம் எது? அதற்கான தகுந்த விலை என்ன? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், குறைந்த விலையில் கூட தரமான பொருட்களை வாங்க முடியும்.  

எளிமையாகவும், நீடித்தும் இருத்தல்:
ஒப்பனைப் பொருட்கள், எளிமையாகக் கையாளும் வகையில் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் சில மணி நேரத்திற்குள்ளாகவே, ஒப்பனை கலைந்து விடக்கூடாது. நீண்ட நேரம் நீடித்து இருக்கும் வகையிலான ஒப்பனைப் பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, ஐ-லைனர் வாங்கும்போது, நீர்த்த வடிவத்தில் இருப்பதை வாங்குவதைத் தவிர்த்து, பென்சில் ஐ-லைனர் வாங்குவது சிறந்தது.

சருமத்துக்கு உகந்ததைத் தேர்ந்தெடுத்தல்:
ஒவ்வொரு ஒப்பனைப் பொருளிலும் பல வகையான வாசனைப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் சருமத்துக்கு ஏற்றதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சருமத்துக்குச் சரியாகப் பொருந்தும் வகையிலான ஒப்பனைப் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். வெயிலில் செல்லும்போது புற ஊதாக் கதிர்களால் சருமம் பாதிக்காமல் இருப்பதற்கு, எஸ்.பி.எப் தன்மை கொண்டதைக் கவனித்து வாங்க வேண்டும். 

பொருத்தமானதைத் தேர்வு செய்தல்:
ஒவ்வொருவருக்கும் முகம், கண், உதடு, சருமம் தனித்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே, அதற்கு ஏற்ற வகையான ஒப்பனைப் பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும். பேக்கேஜ் முறையில், பவுண்டேஷன் முதல் லிப்ஸ்டிக் வரை அனைத்தையும் ஒன்றாக வாங்கலாம்.

பரிசோதித்தல்:
எந்தவிதமான ஒப்பனைப் பொருளையும் வாங்கியவுடன் நேரடியாகப் பயன்படுத்தாமல், முதலில் அதை சிறிது எடுத்து கையில் தடவிப் பார்க்க வேண்டும். அதனால், சருமத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை, என்பதை உறுதி செய்த பின்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

இயற்கைக்கு முதலிடம்:
இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவற்றிலும் ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கலாம். எனவே, நன்கு ஆராய்ந்து ஒப்பனைப் பொருட்களை தேர்வு செய்து வாங்குவது சிறந்தது. 

Next Story