வாழ்க்கை முறை

குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம் + "||" + The importance of festivals in children's lives

குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம்

குழந்தைகள் வாழ்வில் பண்டிகைகளின் முக்கியத்துவம்
தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன. இது குழந்தைகளை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க உதவுகிறது.
வாழ்வில் பெரும் மகிழ்ச்சியையும், அழகிய நினைவுகளையும் தருவது குழந்தைப்பருவம். குறுகியதாக இருந்தாலும், அதன் நினைவுகள் பசுமையானதாக என்றும் மாறாமல் இருக்கும். அதனை இரட்டிப்பாக்கும் விதத்தில் பண்டிகை நாட்கள் அமைகின்றன. குழந்தைகள் வாழ்வில் பண்டிகை கொண்டாட்டங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதனால் ஏற்படும் தாக்கம் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.

கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் அறிதல்
இன்று பலர், பணியின் நிமித்தமாக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு கூட்டுக் குடும்பமாக வாழும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அந்த வாய்ப்பை பண்டிகைகள் பெற்றுத் தருகின்றன. பண்டிகையை கூட்டுக் குடும்பமாக கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்கின்றனர். உறவினர்களிடம் பழகும் வாய்ப்பும், பகிர்ந்துண்ணும் பழக்கமும் இதன் மூலம் ஏற்படுகிறது.

பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ளுதல்
குழந்தைகள் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் பண்டிகைகள் மூலமாக அறிந்துகொள்கின்றனர். உதாரணமாக தைத்திருநாளில் உழவர்களின் முக்கியத்துவத்தையும், தேவையையும் அறிந்துகொள்கின்றனர். பாரம்பரிய உடைகள், விளையாட்டுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும், பலகாரங்களையும் பற்றி அறிந்து கொள்கின்றனர்.

கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல்
தாங்கள் அறிந்த பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கருவியாக பண்டிகைகள் இருக்கின்றன. இது குழந்தைகளை ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க உதவுகிறது. மேலும், குழந்தைகள் தாங்கள் பெற்ற அனுபவத்தை, எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்வதால் கலாசாரமும், பண்பாடும் மறையாமல் இருக்கும்.

இனிமையான நினைவுகளை சேகரிக்கும் தருணம்
குழந்தைப்பருவ நினைவுகளை அவ்வளவு எளிதாக யாரும் மறப்பதில்லை. இப்பருவத்தில் இனிமையான நினைவுகளை மட்டுமே சேகரிப்பது அவசியம். எனவே பெற்றோர்கள் இயன்ற வரை இனிமையான நினைவுகளை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தர முயற்சி செய்ய வேண்டும். முடிந்தவரை பண்டிகை காலங்களில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பது நல்லது. மேலும் அவர்களுக்கு உறவுகளின் முக்கியத்துவத்தையும், பண்டிகைகளின் சிறப்பையும் கற்றுத்தருவது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பாடத்திற்கு, நல்ல தூண்டுகோலாக அமையும்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.