வாழ்க்கை முறை

திருமண சீர்வரிசையில் இடம்பெறும் காசிப் பானையின் பின்னணி + "||" + The background of the gossip pot featured in the wedding arrangement

திருமண சீர்வரிசையில் இடம்பெறும் காசிப் பானையின் பின்னணி

திருமண சீர்வரிசையில் இடம்பெறும் காசிப் பானையின் பின்னணி
செம்பால் செய்யப்பட்ட காசிப்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரைக் குடிப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இந்தத் தண்ணீர் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
பெண்களுக்குத் திருமணத்தின்போது கொடுக்கப்படும் சீர்வரிசையில் நிறைய பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கும். அவற்றில் முக்கியமாக இடம்பெறுவது காசிப்பானையாகும். அதன் பின்னணியை இங்கே காணலாம்.

காசுப் பானை எனும் காசிப்பானை:
‘காசிப் பானை’ முற்காலத்தில் ‘காசுப் பானை’ என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால் பழங்காலத்தில் நாணயங்கள் செம்பு எனும் உலோகத்தால் செய்யப்பட்டன. அந்தப் பானையும் செம்பின் மூலம் செய்யப்பட்டதால் ‘காசுப் பானை’ என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் பேச்சு வழக்கால் ‘காசிப் பானை’ என்று மாறியது.

ஆரோக்கியம் காக்கும் செம்பு:
செம்பு (தாமிரம்) பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது. பழங்காலத்தில் மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. கோவில் மற்றும் குடிநீர் குளங்களில் செம்பு நாணயங்களை போடுவார்கள். அவற்றில் உள்ள செம்பு தாதுகள் அந்த குளத்தில் கலந்து தண்ணீரை வலுப்படுத்தும். ஊர் மக்கள் தினமும் அந்த வளமான தண்ணீரை குடித்தால் அவர்கள் ஆரோக்கியமும் சீராக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.

மாறிவரும் உலகம்:
காலப்போக்கில் மக்கள் செம்புக் குடங்கள் அல்லது செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவது குறைந்தது. அனைத்து வீடுகளிலும் எவர் சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும் இன்றும் திருமணங்களில் பெண் வீட்டார், தங்கள் பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசையில் கண்டிப்பாக காசிப் பானையையும் சேர்த்துக் கொடுப்பார்கள். ஏனென்றால், மணமக்கள் அந்த செம்புப் பானையில் தண்ணீர் ஊற்றி குடித்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.

காசிப் பானையின் நன்மைகள்:
செம்பால் செய்யப்பட்ட காசிப்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரைக் குடிப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். இந்தத் தண்ணீர் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தைச் சீராக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும்.

பாரம்பரியத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல்:
பல நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர்கள் தண்ணீரை ஆரோக்கியமாக பருகுவதற்கு காசிப் பானையைப் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாகவே தமிழக பாரம்பரியத்தில் தங்கள் பெண்ணுக்கு கொடுக்கும் சீர் வரிசையில், காசிப் பானையும் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்தார்கள். இதில் பாரம்பரியம் மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியம் என்ற அறிவியலும் அடங்கியுள்ளது. நாமும் இதனைப் பின்பற்றி காசிப் பானையை வீடுகளில் பயன்படுத்த தொடங்குவோம்! 

தொடர்புடைய செய்திகள்

1. மாதவிடாய் வலியைக் குறைக்கும் சுப்த பத்தகோனாசனம்
வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பத்த கோனாசனம்’ என்றால் ‘கட்டப்பட்ட ஆசன நிலை’ என்று பொருள். எனவே தான் இந்த ஆசனத்தை ‘சுப்த பத்தகோனாசனம்’ என அழைக்கிறார்கள்.
2. மாடலிங்கில் கலக்கும் கிராமத்து தேவதை - ஸ்டெபி கிட்டில்
கிராமத்தில் இருந்து வந்ததால், சாராசரி பெண்ணுக்கு இருக்கும் மேக்கப் நுணுக்கங்கள்கூட அப்போது எனக்கு தெரியாது. சரியாக மேக்கப் போடத் தெரியாது. மாடலிங், நடிப்பு போன்றவற்றில் பயிற்சி பெற்றது இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாகக் கற்றேன்.
3. ஓரிகாமி நகைகள்
ஓரிகாமி நகைகள் ஜப்பானியர்களின் காகிதக் கலை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
4. நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..
நம் சுயநலத்துக்காகவும், பிற்காலத்தில் கிடைக்கப்போகும் சிறு பலனுக்காகவும் நிகழ்கால வாழ்வை மறந்து விடுகிறோம். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, எதையோ நோக்கி, ஒரு நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
5. பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி
ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.