நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்


நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 23 April 2018 1:58 AM GMT (Updated: 23 April 2018 1:58 AM GMT)

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லை, 

நெல்லை தச்சநல்லூரில் சிவன்கோவில் என அழைக் கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடை பெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் காலை 5.30 மணி முதல் 9 மணி வரை கணபதி ஹோமம் நடை பெற்றது. 14-ந் தேதி கொடி மரத்தில் கொடியேற்றப்பட் டது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 8.30 மணி வருசாபி ஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் லட்சு மணன் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டன. தேரோட் டத்தையொட்டி கோவிலில் மதியம் அன்னதானம் வழங் கப்பட்டது. இன்று (திங்கட் கிழமை) காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தேவி, உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்துள்ளனர்.

Next Story