பங்குச்சந்தை துளிகள்
* ஜூபிலண்ட் புட் ஒர்க்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,600-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.1250.75-ஆக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.85 சதவீத உயர்வாகும்.
* பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (பீ.எச்.இ.எல்) நிறுவனப் பங்குகளில் முதலீட்டை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம் என ஈடல்வைஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.85-ல் இருந்து) ரூ.60-ஆக குறைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.72.95-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 1.18 சதவீதம் உயர்வாகும்.
* சன் பார்மா நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.520-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் புதன்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.395.65-ல் நிலைபெற்றது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.03 சதவீதம் ஏற்றமாகும்.
* சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என இன்வெஸ்டெக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. எனினும், இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.1,315-ல் இருந்து) ரூ.1,313-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.1,133-ல் நிலைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.21 சதவீத சரிவாகும்.
* என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்குகளில் முதலீட்டை குறைத்துக் கொள்ளலாம் என கோட்டக் இண்ட்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனம் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.106-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.118.35-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 2.47 சதவீத உயர்வாகும்.
நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.
Related Tags :
Next Story