கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை


கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை
x
தினத்தந்தி 1 Feb 2021 11:08 AM IST (Updated: 1 Feb 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

2021-22-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.  டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட் அடங்கிய பெட்டகத்துடன் ஜனாதிபதியை நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் சந்தித்தனர். 

இதையடுத்து, பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  அதன்பிறகு, பாராளுமன்ற மக்களவையில் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 

Next Story