மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். அதேவேளை 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாடாளுமன்றம் கூடியதும் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் பட்ஜெட் உரையை தொடங்கி பேசி வருகிறார்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு, 5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கவர்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story