ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது - நடிகர் வடிவேலு


ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது - நடிகர் வடிவேலு
x
தினத்தந்தி 13 March 2020 2:29 PM IST (Updated: 13 March 2020 2:29 PM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.

சென்னை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேல் சாமி கும்பிட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஆசை இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது நல்ல விசயம் என்றும் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. 2021 ஆம் ஆண்டு தான் முதலமைச்சராக திட்டமிட்டுள்ளதாக நகைச்சுவையுடன் கூறிவிட்டு வடிவேலு சென்றார்.
1 More update

Next Story