‘அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு


‘அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2021 7:33 PM IST (Updated: 1 July 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறித்துள்ளது.

சென்னை,

தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினி நடித்துவரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. 

குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளி அன்று நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என என படக்குழு அறிவித்துள்ளது. அண்ணாத்த' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story