ஆண்களை கொச்சைப்படுத்தும் 'புஷ்பா' பட பாடல் தடை செய்யக்கோரி வழக்கு
"புஷ்பா" படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு எதிராக ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
விசாகபட்டினம்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், தனஞ்சேயா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அண்மையில் புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் பாடல்களைப் படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘ஊ அன்ட்டவா’ என்ற பாடலை ‘புஷ்பா’ படக்குழு யூடியூபில் வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இப்பாடலின் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் அமைப்பு ஒன்று ஆந்திர ஐகோர்ட்டில் இப்பாடலைத் தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
Related Tags :
Next Story