அழகு மற்றும் ஆரோக்கியம் வேண்டுமா? சமந்தா கூறும் குறிப்புகள்..!
நடிகை சமந்தா அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கான அவருடைய பழக்க வழக்கங்கள் குறித்து கூறியுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவரை இன்ஸ்டாகிராமில் 1.3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னை பின்தொடர்பவர்களுக்கு அழகு குறிப்புகள், உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான தன்னுடைய பழக்கங்கள் குறித்த டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
* வறண்ட சருமம் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கிண்ணத்தில் சூடான தண்ணீர் மற்றும் சுத்தமான துண்டைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நீராவி எடுக்கலாம் என்று கூறுகிறார்.
* சமந்தா இயற்கையான அழகின் மீது நம்பிக்கை கொண்டவர் பெரும்பாலான நேரங்களில் அவர் மேக்கப் அணிவது கிடையாது.
* சமந்தாவின் குறைபாடற்ற சருமத்திற்கான ரகசியம் அவர் வைட்டமின் உட்செலுத்துதல் சிகிச்சை மேற்கொள்கிறார். இது தோலில் உள்ள மெல்லிய கோடுகள், உலர்ந்த திட்டுகள் மற்றும் நிறமிகளை குறைக்க உதவுகிறது.
* சமந்தா இரட்டை மாஸ்க்கிங் முறையை மேற்கொள்கிறார். இந்த செயல்முறையானது ஒரு மாஸ்க்கிங் முறையை காட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கூறுகிறார்.
* சமந்தா உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவை மனதை கெட்ட விஷயங்களில் இருந்து விலக்கி வைப்பதாகவும், அது தனது சருமத்தை பளபளபாக்க உதவுவதாகவும் கூறுகிறார்.
* சிறந்த தோல் மற்றும் ஆரோக்கியத்திற்காக பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை அவர் வலியுறுத்துகிறார்.
Related Tags :
Next Story