வலிமை ரிலீஸ்... தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்; தியேட்டரில் பார்த்த படக்குழுவினர்


வலிமை ரிலீஸ்... தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்; தியேட்டரில் பார்த்த  படக்குழுவினர்
x
தினத்தந்தி 24 Feb 2022 10:44 AM IST (Updated: 24 Feb 2022 10:44 AM IST)
t-max-icont-min-icon

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்தனர்.

சென்னை

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள்.

திட்டமிட்டப்படி இன்று காலை வலிமை திரைப்படம் தியேட்டரில் வெளியானது. அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வலிமை திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 

சில தினங்களுக்கு முன்பாக ரசிகர்கள் ஆர்வமாக தியேட்டரில் வரிசையில் நின்று டிக்கெட்டுக்களை வாங்கிச் சென்றார்கள். வலிமை திரைப்படம் வெளியானதை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பல தியேட்டர்களில் ரசிகர்கள் அஜித்துக்கு கட்-அவுட்டு வைத்து பால் அபிஷேகம் செய்து மாலை போட்டு கொண்டாடினர். மேலும் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்து நடனம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள். இவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story